நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் காதல், வெயில், பழனி, எம்டன் மகன் போன்ற படங்களின் மூலம் நல்ல நடிகராகக் கவனம் பெற்றார்.
பின்னர் அவர் நடித்த படங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில் 2019-ல் வெளியான காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 7 ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பரத் நடித்துள்ளார்.
முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்தில் தற்போது இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், கிஷோர், அஜய் கார்த்திக், பவானி ஸ்ரீ, பூவே உனக்காக சங்கீதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் நேற்று (மார்ச் 20) வெளியானது.
காளிதாஸ் - 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Summary
Kalidass -2 movie trailer released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









