ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நல்ல பங்களிப்பைச் செய்தன.
முக்கியமாக, ஜெயிலர் முழுக்கவே ஹுக்கும் பாடலின் பின்னணி இசையே காட்சிகளுக்கு பலமாக அமைந்திருந்தது.
இந்த நிலையில், ஹுக்கும் பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூபில் 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.