நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் புதிய படத்தை வெளியிடுகிறது.
அமரன் படத்தைத் தொடர்ந்து மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நாயகனாக நடிப்பதுடன் நல்ல கதையம்சமுள்ள படங்களையும் தயாரித்து வருகிறார்.
அப்படி தன் தயாரிப்பு நிறுவனமான எஸ்கே புரடக்ஷன்ஸ் சார்பாக கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, டாக்டர், டான், கொட்டுக்காளி ஆகிய படங்களைத் தயாரித்தார்.
இந்த நிலையில், கனா படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்த ’ஹவுஸ் மேட்ஸ்’ என்கிற படத்தை எஸ்கே புரடக்ஷன்ஸ் வெளியீடு செய்கிறது.
டார்க் காமெடி பாணியில் உருவான இப்படத்தில் காளி வெங்கட், வினோதினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: இலங்கையில் சிக்கித் தவிக்கும் பராசக்தி படக்குழுவினர்?