திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இலங்கையில் சிக்கித் தவிக்கும் பராசக்தி படக்குழுவினர்?

பராசக்தி படம் குறித்து...

News image
Updated On :10 ஏப்ரல் 2025, 5:41 pm IST

பராசக்தி படக்குழுவைச் சேர்ந்த சிலர் இலங்கையில் சிக்கித் தவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியது.

இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் என காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில், இலங்கை படப்பிடிப்பு முடிந்ததால் இயக்குநர் சுதா கொங்காரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இலங்கையில் படப்பிடிப்பை நடத்திக்கொடுக்க ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தததாகவும் படப்பிடிப்பு முடிந்ததும் மீதத் தொகையைச் செலுத்ததாதல் அந்நிறுவனம் பராசக்தியில் பணியாற்றிய சிலரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளனாராம்.

இதனால், அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் நடித்த கோட் படத்தின் படப்பிடிப்பும் இலங்கையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்ததும் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தாமல் வந்ததால்தான் பராசக்தி படக்குழுவினரின் பாஸ்போர்ட்டை அந்நிறுவனம் வாங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.