ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

அரசன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

வெற்றிமாறனுடன் சிலம்பரசன்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:49 pm IST

அரசன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் அரசன். வடசென்னை படத்துடன் இணைந்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி வருவதாக வெற்றிமாறன் தெரிவித்ததைத் தொடர்ந்து இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை இந்தாண்டு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டு, விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்திருந்த நிலையில் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இதனை, டி. ராஜேந்தர் உறுதிபடுத்தியிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ஆடியோவில், “வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க சிலம்பரசனுக்கு ஐசரி கணேஷ் முன்பணம் அளித்திருந்தார். அப்பணம் தொடர்பாக நடந்த நீதிமன்ற வழக்கிலும் அப்பணம் சிலம்பரசனுக்குதான் என தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இதனை மதிக்காமல் ஐசரி கணேஷ் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து அரசன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐசரி கணேஷுக்குத் தர வேண்டிய ரூ. 6.5 கோடியில் ரூ. 4 கோடியை சிலம்பரசனும் மீதமுள்ள தொகையை அரசன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அரசன் படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசனுடன் வெற்றிமாறன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary

Filming for 'Arasan' has resumed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.