
தனுஷ் - 56 முதல்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
தனுஷ் - 56 படப்பிடிப்பு குறித்து...
தனுஷ் - x
நடிகர் தனுஷின் 56-வது திரைப்பட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நடிகர் மம்மூட்டியும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அடுத்தாக, நடிகர் தனுஷ் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தன் 56-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு முடிந்ததும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கும் எனத் தெரிகிறது.
பான் இந்தியத் திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
Information regarding the shooting of actor Dhanush's 56th film has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







