
திரையரங்குகளில் காணத் தவறாதீர்கள்; மொத ராத்திரி படத்தை பாராட்டிய தனுஷ்!
மொத ராத்திரி படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளது குறித்து...

மொத ராத்திரி இயக்குநர் ராஜா கருப்பசாமி உடன் நடிகர் தனுஷ். - படம் - இன்ஸ்டாகிராம்
மொத ராத்திரி படத்தை நடிகர் தனுஷ் செவ்வாய்க்கிழமை (செப். 8) பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் நாயகனாகவும் அனிஷ்மா நாயகியாகவும் நடித்து வெளியான திரைப்படம் மொத ராத்திரி.
புதிதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரே இரவில் நடக்கும் கதையாக எழுதப்பட்டிருந்தாலும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றதுடன் இயக்குநரின் முதல் திரைப்படம் போன்றே தெரியவில்லை என்கிற விமர்சனத்தையும் இந்தப் படம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் உள்பட திரைப் பிரபலங்கள் கார்த்திக் சுப்புராஜ், சிம்பு போன்றோரும் படத்தைப் பாராட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், “மனதை நெகிழ வைக்கும் திரைப்படம். படத்தின் உருவாக்கத்தில் முதல் முறையாக பங்கேற்ற இந்தக் குழுவினரின் அற்புதமான முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தயவுசெய்து உங்கள் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் இந்தப் படத்தைக் காணத் தவறாதீர்கள்” என்று பாராட்டியுள்ளார்.
Summary
Actor Dhanush praised the movie Motha Rathiri on Tuesday (Sept. 8).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






