
ரசிகர்களிடம் அமோக வரவேற்பு: நெகிழ்ச்சியாகப் பேசிய மொத ராத்திரி பட நடிகை!
மொத ராத்திரி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சுமித்ரா தேவி குறித்து...

நெகிழ்ச்சியாகப் பேசிய ராத்திரி பட நடிகை - படங்கள்: இன்ஸ்டா / சுமித்ரா தேவி.
மொத ராத்திரி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சுமித்ரா தேவி ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடித்து, அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ’மொத ராத்திரி’ என்ற புதிய திரைப்படம் கடந்த ஆக. 21ஆம் தேதி வெளியானது.
புதிதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் அனீஷ்மா அனில்குமார் நாயகியாக நடித்துள்ளார். இதில் கதாநாயகனின் தங்கையாக நடித்துள்ள சுமித்ரா தேவிக்கும் ரசிகர்களிடம் மிகுதியான வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் கவனம்பெற்ற சுமித்ரா தேவி முதல்முறையாக வெள்ளித்திரையில் நடித்துள்ளார். அவர் கண்ணீருடன் நெகிழ்ச்சியாக பேசியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் சுமித்ரா. மொத ராத்திரி படத்தில் கீர்த்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நாயகனின் தங்கையாக நடித்துள்ளேன். படம் வெளியாகி இரண்டாவது வாரமும் நல்ல வரவேற்பு கிடைப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம்.
இந்த வாரம் பெரிய நடிகர்களின் படமும் வெளியானது. இருந்தும் வார இறுதியில் அரங்கம் நிறைந்த காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. யாரென்றே தெரியாத பலரும் எனக்கு பத்தி பத்தியாக குறுஞ்செய்திகள் அனுப்புகிறார்கள். நீங்கள் நன்றாக நடித்துள்ளீர்கள். படம் நன்றாக இருக்கிறதெனக் கூறுகிறார்கள். மேலும் நல்ல படங்கள் செய்ய ஆசையாக இருக்கிறது.
இதில் நடித்த முக்கால்வாசிபேருக்கு இது முதல்படம்தான். படம் பார்க்காதவர்கள் குடும்பத்துடன் சென்று பாருங்கள். இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என்னைப் பின்தொடர்பவர்களும் நன்றி. மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மிக்க நன்றி என்றார்.
Summary
Overwhelming reception from fans: 'Modha Rathiri' actress Sumithra Devi moved to tears!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







