ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

திண்டுக்கல் லியோனி மகனின் டெலிவரி பாய் டிரைலர்!

டெலிவரி பாய் படத்தின் டிரைலரை வெளியிட்ட சிலம்பரசன்.

டெலிவரி பாய் படத்தின் டிரைலர். - படம்: விடியோ கிளிப்

Published On :

காதல், அதிரடி, காமெடி என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, லியோ சிவக்குமாரின் டெலிவரி பாய் படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிலம்பரசன் இன்று(அக். 12) வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, அசாசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அழகான அம்மா – மகன் பாசத்துடன் தொடங்கும் டிரைலர், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது, அதன் மூலம் அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன என்பதை டிரைலர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் குற்றச் செயல்கள் சார்ந்த சம்பவங்களும் இணைந்திருப்பது கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

அம்மா – மகன் பாசம், காதல், அதிரடி, காமெடி என முழுமையான திரைப்படத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு இடையே அதிரடியான காட்சிகளும், நகைச்சுவை மற்றும் காதல் தருணங்களும் இடம்பெறுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலையும் டிரைலர் ஏற்படுத்துகிறது.

படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமாரின் தாயாக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசோக்குமார் ராஜ், பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Summary

The trailer of Leo Sivakumar's Delivery Boy, which is full of entertainment features like romance, action and comedy, is attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.