
நடிகை பிரியா வாரியர் நடிகர் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் நடித்தது குறித்து மிக நீண்ட பதிவு எழுதியுள்ளார். அதில் எவ்வளவு எழுதினாலும் போதாது எனக் கூறுயுள்ளார்.
ஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியா வாரியர் தமிழில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது, அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். அவரது நடனம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்நிலையில் அஜித்துடன் நடித்தது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியா வாரியர் கூறியதாவது:
எவ்வளவு எழுதினாலும் தீராது
பச்... எங்கிருந்து நான் தொடங்குவது? நிறைய நாள்களுக்கு முன்னதாகவே இது நடந்துவிட்டது. என்ன எழுதினாலும் நான் எவ்வளவு உங்களை (அஜித்தை) மதிக்கிறேன் என்பதை வெளிப்படுத்த போதாது.
முதல்முறையாக பேசியதில் இருந்து கடைசிநாள் படப்பிடிப்பு வரை நீங்கள் என்னை உறவினரைப் போல பார்த்துக்கொண்டீர்கள். அனைவரையும் வெளி ஆள் என்பது போல சிறிது நேரமும் நீங்கள் உணரவைக்கவில்லை.
நீங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது அனைவரும் நலமாக இருப்பதை ஒவ்வொரு முறையும் கவனித்துக் கொள்வீர்கள்.
நாம் ஒன்றாக சாப்பிட்ட அனைத்தையும் இங்கு குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த அந்த நாள்கள் மிகவும் சிறந்தது.
இவ்வளவு கிறுக்குவதற்கு காரணம் நீங்கள்தான்
உங்களிடம் இருக்கும் ’பினோச்சியோ'(கார்டூன் கதாபாத்திரம்)வை நான் மிகவும் மதிக்கிறேன், நேசிக்கிறேன். குடும்பம், கார் ரேஸ், பயணம் குறித்து நீங்கள் பேசும்போதெல்லாம் எவ்வளவு மிளிர்கிறீர்கள் என்பதை நான் உங்கள் கண்களில் கண்டேன்.
உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் அனைத்தையும் கவனித்து அதற்கு மதிப்பவளிப்பவர் நீங்கள். உங்களது பொறுமை, ஆர்வம் இளம் நடிகையாக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.
நான் இவ்வளவு கிறுக்குவதற்கு காரணம் உங்களது தன்னடக்கமும் ஜென்டில்மேன் தனமும்தான். நீங்கள் உண்மையான ஒரு மாணிக்கம்.
மீண்டும் நடிக்க விரும்புகிறேன்
உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் தன்னடக்கத்துடன் இருப்பதே.
’தொட்டு தொட்டு’ பாடலை நான் எனது சினிமா வாக்கையில் எப்போதும் மிகவும் பிடித்த தருணமாக நினைக்கிறேன். குட் பேட் அக்லி படத்தில் உங்களுடன் நடித்த அனுபவத்தை எப்போதும் நெஞ்சில் பொதித்து வைப்பேன்.
உங்களை நேரில் சந்திக்கவும் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.
தயவுசெய்து எங்கள் அனைவரையும் தொடர்ந்து உங்களது படங்களால் மகிழ்வியுங்கள். மீண்டும் உங்களுடன் வேலைப் பார்க்க வேண்டுமென சுயநலமாக விரும்புகிறேன். அதிகமான அன்புடனும் மரியாதையுடனும் உங்களது அதி தீவிர ரசிகையாக நான் பிரியா வாரியர் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.