நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான, ‘பியார் பிரேம காதல்’, 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று இவரை மினிமம் கியாரண்டி நாயகனாக மாற்றியுள்ளது.
அடுத்ததாக, டீசர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஹரிஷ் கல்யாணின் 15-வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் நாயகியாக ப்ரீத்தி முகுந்தனும் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: என்னால்தான் ஸ்ரீ இப்படியானாரா? பிரபல தயாரிப்பாளர் விளக்கம்!