நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்திற்காக ஹனுமன்கைண்ட் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த சூரஜ் சேருகத் என்பவர் ஹனுமன்கைண்ட் (hanumankind) என்கிற பெயரில் ஹிப்ஹாப் பாடகராக இருக்கிறார். (ஹனுமன்கைண்ட் என்றால், தன் கலாச்சாரத்தின் பலத்தை வெளிப்படுத்த கடவுள் ஹனுமனையும், எல்லாரும் சமம்தான் என அன்பைக் குறிக்க hanuman kind ஆக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.)
சில மாதங்களுக்கு முன் ஹனுமன்கைண்ட் தன் பிக் டாக்ஸ் (bigdawgs) என்கிற ஹிப்ஹாப் ஆல்பத்தை வெளியிட்டார். இவரே எழுதி, இசையமைத்து, பாடி, நடனமாடிய இப்பாடல் உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது.
முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவான இப்பாடல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்தவர்களைப் பெரிதாக ஈர்த்ததால் மிகப்பெரிய பிரபல வெளிச்சத்திற்குள் சென்றார். அண்மையில், வெளியான ரைஃபில் கிளஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, ரன் இட் அப் (Run it up) என்கிற புதிய ஹிப்ஹாப் இசை ஆல்பத்தை வெளியிட்டார். கேரள பண்பாட்டு பின்னணியில் உருவான இப்பாடல் உலகளவில் பல நாட்டு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் ராப் பகுதிகளை ஹனுமன்கைண்ட் பாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒரே நாளில் வெளியாகும் சந்தானம், சூரி படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.