பிரதீப் ரங்கநாதன் நாயனாக நடிக்கும் எல்ஐகே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு கோவையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தமிழ் புத்தாண்டான நேற்று (ஏப். 14) முழுமையாக நிறைவடைந்துள்ளதாக விக்னேஷ் சிவன் விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
லவ் டுடே, டிராகன் ஆகியவை பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்ததால் எல்ஐகே மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ஜன நாயகனில் பாடிய ஹனுமன்கைண்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.