ஒவ்வொரு வலியும் பாடம்... சோகத்தை புன்னகையுடன் பகிர்ந்த சிறகடிக்க ஆசை நாயகி!

சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா வெளியிட்டுள்ள விடியோ குறித்து...
கோமதி பிரியா
கோமதி பிரியாஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா ரசிகர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் புதிய விடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒவ்வொரு வலியும் பாடத்தைக் கற்றுத்தருவதாகவும், ஒவ்வொரு பாடமும் மனிதர்களை மாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், மலையாளத் தொடர்களில் நடித்துவருவதால், தமிழ்நாட்டிற்கும் கேரளத்துக்கும் அடிக்கடி பயணித்துவரும் கோமதி பிரியா, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்தவகையில் தமிழ்நாட்டில் தமிழ் வருடப் பிறப்பு மற்றும் கேரளத்தில் விஷு பண்டிகையையொட்டி கேரளத்துக்குச் சென்றுள்ள கோமதி பிரியா, விழாக்கோலம் பூண்டிருந்த கோயிலில் இருந்து ரசிகர்களுக்காக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோயில் அருகே உள்ள கேளிக்கை பூங்கா ராட்டினத்தில் அமர்ந்தவாறு ரஜினிகாந்த் பாணியில் கண்ணாடி அணிய பலமுறை முயற்சிக்கிறார். பலமுறை தவறிய பிறகு தன்னுடைய பாணியில் கண்ணாடி அணிகிறார்.

கோமதி பிரியாவின் விடியோவிலிருந்து...
கோமதி பிரியாவின் விடியோவிலிருந்து...இன்ஸ்டாகிராம்

தன்னுடைய குழந்தைதனத்தை வெளிப்படுத்தும் வகையிலான கோமதி பிரியாவின் இந்த விடியோ, ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் பலர் மலையாளத்திலும் தமிழிலும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விடியோவைப் பகிர்ந்து அதில், ஒவ்வொரு வலியும் பாடத்தைக் கற்றுத்தருகிறது; ஒவ்வொரு பாடமும் மனிதர்களை மாற்றுகிறது என்ற ஆழ்ந்த கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகையாக சந்திக்கும் சவால்கள் பல இருந்தும் அதனை வெளிக்காட்டாமல், மறைத்துக்கொண்டு கேளிக்கையாக தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களுடன் கோமதி பிரியா பகிர்ந்துள்ளதாகப் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | விரைவில் குக் வித் கோமாளி - 6: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதையும் படிக்க | சின்ன திரையிலிருந்து விலகியது ஏன்? காவ்யா அறிவுமணி விளக்கம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com