ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சின்ன திரையிலிருந்து விலகியது ஏன்? காவ்யா அறிவுமணி விளக்கம்!

சின்ன திரைத் தொடர்களில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை காவ்யா அறிவுமணி விளக்கம் அளித்துள்ளார்.

News image

காவ்யா அறிவுமணி

இன்ஸ்டாகிராம்

Updated On :9 ஏப்ரல் 2025, 11:44 am

DIN

சின்ன திரைத் தொடர்களில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை காவ்யா அறிவுமணி விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் (முதல் பாகம்) தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை காவ்யா அறிவுமணி, 3 படங்களில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது கவின் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.

2022-ல் மிரள் படத்தில் ஹேமா என்ற பாத்திரத்தில் நடித்த காவ்யா, 2023ஆம் ஆண்டு ரிப்பப்பரி என்ற படத்தில் பாரதி என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்த இரு படங்களைத் தொடர்ந்து நிறம் மாறும் உலகில் படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கட்டட வடிவமைப்புப் பொறியியல் பட்டதாரியான இவர், தற்போது சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில், சின்ன திரையில் இருந்து விலகியது ஏன்? என்ற காரணத்தைப் பகிர்ந்துள்ளார்.

காவ்யா அறிவுமணி

காவ்யா அறிவுமணி

இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள காவ்யா,

''பலரைப் போல மிகப்பெரிய கனவுகளுடன் இருக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்தான் நான். சிறிய வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆசை. பள்ளி நாள்களில் மேடைகளில் நடித்து கைதட்டல்களைப் பெற்றதுதான் எனக்கு கிடைத்த ஆரம்பகட்ட ஊக்கம்.

பதின்ம வயதில் இதற்கான முயற்சியாக, சொந்த ஊரான ஆம்பூரில் இருந்து சென்னைக்கு வந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு சினிமா வாய்ப்பு தேடி அலைந்தேன். ஆனால், சில யூடியூப் சேனல்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர்தான் பாரதி கண்ணம்மா தொடரின் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தேன்.

சின்ன திரையில் நடித்துவந்தாலும், சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஆனால் என்னுடைய இரு சகோதரிகளின் கல்விச் செலவை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். எனது குடும்பமும் என் வருவாயையே நம்பியிருந்தது.

அதனால், உத்தரவாதமான வருவாய் அளித்துவரும் சின்ன திரையை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியவில்லை. சினிமாவுக்குச் செல்ல வேண்டியவள் நான், குடும்பத்துக்காக சின்ன திரையிலேயே இருந்துவிடுவேனோ என பல நாள்கள் ஏங்கியிருக்கிறேன். பல இடங்களில் நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன்.

காவ்யா அறிவுமணி

காவ்யா அறிவுமணி

நம்பிக்கை குறையவில்லை

சின்ன திரைக்கும் இதேதான் நடந்தது. முதல் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு பல நிராகரிப்புகள் நடந்துள்ளன. இதேதான் சினிமாவுக்கு நடக்கிறது என என்னை நானே தேற்றிக்கொள்வேன்.

பணத்திற்காக வேலை செய்யக் கூடாது; திருப்திக்காக வேலை செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அதனால், சின்ன திரையில் விலகும் மிகப்பெரிய முடிவை நான் எடுத்தேன். என் முடிவு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்ற கவலையை விட, நிச்சயமாக சினிமாவில் நடிகையாகிவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டுமே அதிகம் இருந்தது.

இன்றும்கூட நான் ஆடிஷன்களுக்குச் செல்வதுண்டு. சினிமாவிலும் நடிகையாவிட்டோமே இனியும் ஏன் ஆடிஷன்களுக்குச் செல்ல வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.