கணவன் - மனைவி குறித்து உருவ கேலி... நடிகை வைஷ்ணவி வருத்தம்!

உருவ கேலியால் மனவருத்தம் அடைந்த வைஷ்ணவி உருக்கமான பதிவு...
கணவருடன் வைஷ்ணவி
கணவருடன் வைஷ்ணவிஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

கணவன் - மனைவி இடையே இருக்கும் மனபொருத்தத்தைவிட சிலருக்கு உருவ கேலியே பெரிதாகத் தெரிகிறது என சின்ன திரை நடிகை வைஷ்ணவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரில் நாயகியாக நடிப்பவர் நடிகை வைஷ்ணவி. இவர் சமீபத்தில் சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன், நடிகர் வெற்றி வசந்த்தை திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணத்துக்குப் பிறகான தங்கள் நாள்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை விடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய நடிகை வைஷ்ணவி, தான் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது கணவர் அருகில் இருந்து தாய் போன்று பார்த்துக்கொண்டதாக விடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

கணவனும் மனைவியும்
கணவனும் மனைவியும்இன்ஸ்டாகிராம்

அந்த விடியோ பதிவில், மனைவியை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் வெற்றி குறித்தும் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த வைஷ்ணவி குறித்தும் உருவ கேலி செய்யும் விதமாக சிலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

திருமண நாளில் வெற்றியும் வைஷ்ணவியும்
திருமண நாளில் வெற்றியும் வைஷ்ணவியும்இன்ஸ்டாகிராம்

இதுபோன்ற கருத்துகளுக்கு நடிகை வைஷ்ணவி வருத்தம் தெரிவித்துள்ளார். ’ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு வாழ்த்த வேண்டும் என்று அவசியம் இல்லை; ஆனால், மற்றவர்கள் மனம் கஷ்டப்படும் வகையில் சிலர் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபலங்கள் என்றால் என்ன? அவர்களுக்கும் சுக துக்கங்கள் இருக்கும். அவர்கள் அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது தவறான விஷயம் கிடையாது. இது போன்ற கருத்துகளைப் பதிவு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | வதந்திகளைப் பரப்ப வேண்டாம்! பவித்ரா லட்சுமி வேண்டுகோள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com