வதந்திகளைப் பரப்ப வேண்டாம்! பவித்ரா லட்சுமி வேண்டுகோள்

வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என நடிகை பவித்ரா லட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமிஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

தனது உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என நடிகை பவித்ரா லட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது தான், சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அதனால் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை பவித்ரா லட்சுமி, நாய் சேகர், பவித்ரா உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். இதனிடையே சமீபத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களில் அவர் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவதால், பலர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினிமா வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியதும், பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும், அதனால் உடல் தோற்றம் மாறியுள்ளதாகவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமிஇன்ஸ்டாகிராம்

இதனிடையே இது குறித்து பவித்ரா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''என்னுடைய தோற்றம் மற்றும் உடல் எடை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக இது குறித்து விளக்கம் அளித்துவிட்டபோதிலும், இந்த வதந்திகள் குறைந்தபாடாக இல்லை.

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன் என்பது போன்ற அடிப்படை உண்மையற்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. என்னுடைய உடல்நிலை குறித்து சில குறிப்பிட முடியாத பதிவுகளையும் காண முடிகிறது.

நான் மீண்டும் கூறுகிறேன். எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறேன். நல்ல மனிதர்களின் கரங்களில் எனக்கு முறையான பராமரிப்பு கிடைத்து வருகிறது. இந்தக் கடுமையான நேரத்திலும் உண்மையாகவே அக்கறைகொண்டு என் உடல் நலம் குறித்து விசாரித்தவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமி இன்ஸ்டாகிராம்

அனைத்து ஊடகங்கள் மற்றும் மனிதர்களிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் வாழ்க்கை உள்ளது; எதிர்காலம் உள்ளது. வதந்திகளைப் பரப்பி அதனை மேலும் கடினமாக்கிவிட வேண்டாம். மிகச்சிறிய அளவிலான மரியாதையும் அன்பும் மட்டுமே உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். அதை கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் கொடுத்துவந்ததுதான். அதில் எந்த மாற்றமும் வேண்டாம். உங்கள் மகள் விரைவில் உடல் நலத்துடன் திரும்புவாள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | எஸ்.வி. சேகர் யாரென்றே தெரியாது! அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஷோபனா கருத்து!

இதையும் படிக்க | கணவன் - மனைவி குறித்து உருவ கேலி... நடிகை வைஷ்ணவி வருத்தம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com