வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிக்ஸ் பேக் சர்ச்சைக்கு பதிலளித்த விஷால்..! சூர்யா அல்ல, தனுஷ்தான் முதல்முறை!

சிக்ஸ் பேக் சர்ச்சைக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

News image

சூர்யா, தனுஷ், விஷால். - கோப்புப் படங்கள்.

Updated On :24 ஏப்ரல் 2025, 12:24 pm

சூர்யாவுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் பேசியது சர்ச்சையானது.

அந்த நிகழ்வில் சிவக்குமார், “என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?” எனப் பெருமையாகப் பேசினார்.

இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் எழுந்தது.

இந்தப் பிரச்னையில் நடிகர் விஷால் ரசிகர்கள் எங்களது புரட்சி தளபதி சத்யம் படத்திலேயே வைத்துவிட்டார் எனக் கூறினார்கள்.

இது குறித்த கேள்விக்கு விஷால், “முதல்முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். பிறகு நான் சத்யம் (2008), மதகஜராஜா (2012) படங்களுக்காக வைத்தேன்” என்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் 2007ஆம் ஆண்டு வெளியானது.

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் 2008 நவம்பரிலும் விஷாலின் சத்யம் 2008 ஆகஸ்டிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.