தேசிய விருதுகள்: சிறந்த மலையாளப் படம் 'உள்ளொழுக்கு'; சிறந்த துணை நடிகை ஊர்வசி!

தேசிய விருதுகள் அறிவிப்பு பற்றி...
national award: best malayalam film
உள்ளொழுக்கு படத்தில் ஊர்வசி, பார்வதி.X
Published on
Updated on
1 min read

தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த மலையாளத் திரைப்படமாக 'உள்ளொழுக்கு' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில் சிறந்த மலையாளப் படமாக 'உள்ளொழுக்கு' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை ஊர்வசி பெற்றுள்ளார்.

கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, பார்வதி நடிப்பில் வெளியான 'உள்ளொழுக்கு' திரைப்படம் பெரிதும் கவனம் பெற்று ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது.

மேலும் இப்படத்தில் அர்ஜுன் ராதாகிருஷ்ணன், பிரசாந்த் முரளி, அலான்சியர் லோபஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இதற்கு இசையமைத்துள்ளார். ஷெஹ்னத் ஜலாலின் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மனிதர்களின் உணர்வுகள் குறிப்பாக இரு பெண்களின் உள் உணர்வுகளை பேசும் படமாக இது இருந்தது.

உள்ளொழுக்கு

ஒரு துணிக்கடையில் வேலை செய்து வரும் அஞ்சு(பார்வதி)யின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து, லீலாம்மா(ஊர்வசி)வின் மகன் தாமஸ் குட்டி(பிரசாந்த் பிள்ளை)க்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர் அஞ்சுவின் பெற்றோர்.

தாமஸ் குட்டி உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாகிட அஞ்சுவும் லீலாம்மாவும் அவரை கவனித்துக்கொள்கின்றனர். ஒருகட்டத்தில் அவர் இறந்தும் விடுகிறார்.

இந்த சூழ்நிலையில் மாமியாரும் மருமகளும்(அஞ்சு, லீலாம்மா) சில உண்மைகளை மனதில் புதைத்து வைத்திருக்கின்றனர். அதனை மறைத்து இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் காட்சிகள் மிகவும் நுட்பமாகக் காட்டப்பட்டுள்ளன. மிகவும் இறுக்கமான மனநிலையில் இருக்கும் அவர்கள் இருவரின் மனவோட்டத்தை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

இறுதியாக உண்மைகள் தெரியவந்து அவர்கள் இருவரும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இறுதி முடிவு என்ன எடுக்கிறார்கள்? என்பதே படத்தின் கதை.

அமேசான் பிரைமில் இந்த படத்தைக் காணலாம்.

Summary

National awards: Ullozhukku is the best malayalam film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com