2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், சிறந்த நடிகர் விருதினை ஹிந்தி நடிகர் ஷாருக் கான் வென்றுள்ளார்.
12th பெயில் திரைப்படத்தில் நடித்த விக்ராந்த் மாசிக்கும் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஜவான் படத்தில் நடித்திருந்ததற்காக, நடிகர் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லி இயக்கிய ஜவான் படத்துக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் தன்னுடைய முதல் தேசிய விருதைப் பெறுகிறார். 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதுக்கு பார்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்தமுறை 2023ஆம் ஆண்டுக்கான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுக்கான போட்டியில் 332 படங்கள் இடம்பெற்றன.
பார்க்கிங் படத்துக்கு மூன்று விருதுகள்
தமிழில் சிறந்த திரைப்படமாக பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநராக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
சிறந்த துணை நடிகர்
2023ஆம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தில் நடித்திருந்த எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக் கதை
பார்க்கிங் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதுடன், சிறந்த திரைக் கதைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர்
சிறந்த இசையமைப்பாளராக வாத்தி திரைப்படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்படுகிறது. வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ் - சம்யுக்தா நடித்திருந்தனர்.
71-ஆவது தேசிய விருதுகள் விவரம்
தைபேயி - பய் டங் ஸ்டெப் ஆஃப் ஹோப்
தெலுங்கு - பகவந்த் கேசரி
தமிழ் - பார்க்கிங்
பஞ்சாபி - கால் ஆஃப் எக்சைட்மெண்ட்
ஒடிசா - புஷ்கரா
மராத்தி - ஷியாமச்சி ஆய்
மலையாளம் - உள்ளொழுக்கு
கன்னடம் - கண்டீலு - தி ரே ஆஃப் ஹோப்
தேசிய விருதுகளின் பட்டியல்
சிறந்த படம்: 12th ஃபெயில்
சிறந்த நடிகர்: ஷாருக் கான்
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி
சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
சிறந்த பின்னணி இசை : ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
சிறந்த துணை நடிகர் : எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்)
சிறந்த துணை நடிகை : ஊர்வசி (உள்ளொழுக்கு)
சிறந்த பின்னணிப் பாடகர் : சாலியா (ஜவான்), ரோஹித் (பிரேமிஸ்துன்னா)
சிறந்த பாடலாசிரியர்: கசாரளா ஷ்யாம்
சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: நந்து - பிருத்வி
சிறந்த படத் தொகுப்பு: மிதுன் முரளி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.