3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

3 கோடி பார்வைகளைக் கடந்துள்ள தலைவன் தலைவி படத்தின் பாடல்.
பொட்டல முட்டாயே பாடல்.
பொட்டல முட்டாயே பாடல்.
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்தின் இடம்பெற்ற பாடலான 'பொட்டல முட்டாயே’ 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தில் இடம் பெற்றிருந்த 'பொட்டல முட்டாயே’ பாடலை யூடியூப்-ல் 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இப்பாடலை சுப்லக்‌ஷினி உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாபா பாஸ்கர் இப்பாடலுக்கான நடனத்தை இயக்கியுள்ளார்.

Summary

The song 'Pottala Muttaye', featured in the film Thalaivan Thalaivi starring actor Vijay Sethupathi, has crossed 30 million views.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com