
நடிகர் ரஜினி இயக்குநர் லோகேஷ் நேர்காணலை எவ்வளவு நேரம் பார்த்தாலும் முடியவில்லை என கிண்டலாக கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நேற்று (ஆக.2) வெளியாகியுள்ளது.
லோகேஷ் தான் கமல் ரசிகர் என்று ரஜினியிடன் சொல்லிவிட்டுதான் கதையைக் கூறியிருக்கிறார். அதற்கு பதிலடி இசை வெளியீட்டு விழாவில் அளிப்பேன் என ரஜினி கூறியதாக லோகேஷ் முன்னமே நேர்காணல் ஒன்றில் இதனைப் பகிர்ந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு இதன் இசைவெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ரஜினி பேசியதாவது:
கூலி கதை சொல்லும்போது லோகேஷ் தான் கமல் ரசிகர் என்று சொன்னார். ’யோவ், நான் கேட்டனா? நீ யார் ரசிகர் என்று நான் கேட்டனா?’ இது பஞ்ச் வசனங்கள் பேசும் படமல்ல, புத்திசாலித்தனமான படம் என்று மறைமுகமாக சொல்கிறாராம் (குறும்பாக சிரிக்கிறார்).
அடுத்து லோகேஷ் கனகராஜின் ஒரு நேர்காணலைப் பார்த்தேன். உட்கார்ந்துகொண்டு பார்த்தேன், நின்றுகொண்டு பார்த்தேன், படுத்துக்கொண்டு பார்த்தேன். தூங்கி எழுந்து பார்த்தாலும் அது முடியவில்லை என சிரித்துக்கொண்டே பேசினார்.
சமீபத்தில் நீயா நானா கோபியுடனான யூடியூப் சேனலுக்கு இரண்டு மணி நேரத்துக்கு லோகேஷ் கனகராஜ் நேர்காணல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.