ஹிந்தியா, மராத்தியா என்கிற சர்ச்சைக்கு நடுவே ஹிந்தியில் பேச மறுத்துள்ளார் நடிகை கஜோல்.
நடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னனி நாயகியாக இருந்தவர். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழில் நடிகர் பிரபு தேவாவுடன் மின்சாரக் கனவு படத்தில் நடித்திருந்தார்.
பின், நீண்ட காலம் கழித்து நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி - 2 திரைப்படத்தில் வில்லியாக நடித்து கவனம் பெற்றார்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கஜோல், மராத்தியிலும் ஆங்கிலத்திலும் பதிலளித்து வந்தார். அப்போது, செய்தியாளர், ‘ஹிந்தியில் பேசுங்கள்’ என்றார்.
அதற்கு கஜோல், “ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்” எனக் கோபமாகப் பதிலளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே நிகழும் சர்ச்சையால் கஜோலின் இப்பதில் காரசார விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிக்க: நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.