நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் லியோ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் புரமோஷன்களால் இந்தியளவில் பல திரைகளில் கூலி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் நாகர்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா என பான் இந்திய மொழிகளுக்கு ஏற்ற நட்சத்திர நடிகர்கள் இணைந்துள்ளதால் பெரிய வணிக வெற்றியை அடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூலி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய இரண்டு நாள்களிலேயே இந்தியாவின் முக்கிய நகரங்களில் படத்தின் முதல் நான்கு நாள்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
இறுதியாக, விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு முதல் மூன்று நாள்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்த்திருந்தன. இதனால், லியோ சாதனையை குறைவான நேரங்களிலேயே கூலி முறியடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.