
எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து ஈஸ்வரி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா, விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் பார்வதி, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்தப் பாகத்திலும் தொடர்கின்றனர். முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வருகிறது.
கதையின் படி, ஆதி குணசேகரனின் - ஈஸ்வரியின் மகனான தர்ஷனுக்கு, அன்புக்கரசி என்ற பெண்ணுடன் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாட்டை ஆதி குணசேகரன் செய்கிறார்.
இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாத தர்ஷன், தான் காதலிக்கும் பார்கவியைதான் திருமணம் செய்வேன் என்று கூறி வருகிறார். இந்தச் சூழலில் ஆதி குணசேகரனால் தாக்கப்படும் ஈஸ்வரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
இப்படியாக கதைக்களம் சென்று கொண்டிருக்கும் நிலையில், எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து, நடிகை விலகியிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
ஈஸ்வரியின் பாத்திரம் முடிக்கப்படவுள்ளதால் கனிகா விலகினாரா? அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினாரா? என்பதற்கான விடை சில நாள்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நடிகை கனிகா எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. அவர் துபாய் சென்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் - 2 தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியுள்ளதாக வெளியான தகவல், இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.