நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
ரஜினி ரசிகர்கள் என்றில்லை திரைப்படங்களை ரசித்துப் பார்க்கும் பலருக்கும் ரஜினி படமென்றால் ஒரு கொண்டாட்ட மனநிலைதான். ஒன்றல்ல, இரண்டல்ல தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கி வைத்த அடையாளத்திற்கு இன்றுடன் வயது 50 ஆண்டுகள்!
ஒவ்வொரு பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கொண்டாடித் தீர்க்கப்பட்ட ரஜினி திரைப்படங்களைப் பார்த்தால், அதுவே ஒரு பட்டியல்தான்.
இந்த பொன் விழா ஆண்டில் ரஜினி நடித்த கூலி மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்குதான் என்றாலும் அண்டை மாநிலங்களாக கேரளம் மற்றும் கர்நாடகத்தில் 6 மணிக்குத் துவங்கிய முதல் காட்சி முடிந்து படத்தின் விமர்சனங்கள் கொட்ட ஆரம்பித்து விட்டன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணைந்த முதல் படமென்பதால் பலருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், கூலி திரைப்படத்தைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விஷயங்களையே கூறி வருகின்றனர்.
முக்கியமாக, நட்சத்திரங்களை மட்டும் நம்பி கதையை விட்டுவிட்டார்கள்; லோகேஷ் கனகராஜின் மோசமான திரைப்படம் இதுதான் போன்ற ஆதங்கமான பதிவுகளையே காண முடிகிறது.
இதையும் படிக்க: ரஜினி 50! ஆயிரம் பூக்கள் மலரட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.