நடிகர் கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் உருவாகும் கிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.
ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ’திருடி’ எனும் முதல் பாடலான பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். ஆஷிக் ஏ. ஆர். பாடல் வரிகளில் மென்மையான காதல் பாடலான ‘திருடி’ ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது.
ஆனால், நீண்ட நாள்களாக இப்படத்தின் வெளியீடு தள்ளிச்சென்றபடியே இருக்கிறது. காரணம், ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் எதிர்பார்த்த தொகைக்கு விற்பனையாகாமல் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தை வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.
இதையும் படிக்க: இப்படி பண்ணிட்டீங்களே தலைவா! கூலி எப்படி இருக்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.