பவர்ஹவுஸ்... வைரலாகும் ரஜினியின் உடற்பயிற்சி விடியோ!
நடிகர் ரஜினி உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நேற்று (ஆக.14) உலகம் முழுவதும் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் கூலி படத்திற்குப் பிறகு ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி இசை வெளியீட்டு விழாவில் உடற்பயிற்சி குறித்து ரஜினி பேசியது கவனம் ஈர்த்தது.
சமூக வலைதளத்தில் ரஜினியின் இந்தப் பேச்சினை வைத்து பலரும் ரீல்ஸ் செய்து வருகிறார்கள்.
ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினி உடற்பயிற்சி செய்யும் விடியோ வைரலாகி வருகிறது.
இந்த வயதிலும் ரஜினியின் ஆர்வம், உழைப்பு, ஆரா என அவரது ரசிகர்கள் இந்த விடியோவை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
A video of actor Rajinikanth exercising is going viral on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

