ஏகே - 64 எப்படிப்பட்ட கதை? ஆதிக் விளக்கம்!

ஏகே - 64 திரைப்படம் குறித்து....
ஏகே - 64 எப்படிப்பட்ட கதை?
ஆதிக் விளக்கம்!
Published on
Updated on
1 min read

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே - 64 ஆக உருவாகும் இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாவும் நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. ஆனால், ஏகே - 64 அனைவருக்குமான படமாகவும் அதேநேரம் வித்தியாசமாகவும் இருக்கும். முக்கியமாக, நடிகர் அஜித்தை புதிய கோணத்தில் காண்பிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அது அவரின் ரசிகர்களுக்கும் பிடிக்கும்படியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

director adhik ravichandran shares his ak 64 movie concept and story attempt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com