நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!

நாய்களை விட குழந்தைகளே முக்கியம் எனக் கூறி விடியோ வெளியிட்ட ஜி.பி. முத்துவுக்கு சின்ன திரை நடிகை ஸ்வேதா பதிலடி கொடுத்துள்ளார்.
ஜி.பி. முத்து / ஸ்வேதா
ஜி.பி. முத்து / ஸ்வேதாபடம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

நாய்களை விட குழந்தைகளே முக்கியம் எனக் கூறி விடியோ வெளியிட்ட ஜி.பி. முத்துவுக்கு சின்ன திரை நடிகை ஸ்வேதா பதிலளித்துள்ளார்.

குழந்தைகள் மீது அக்கறை இருந்தால், அவர்களை நாய் கடிக்கும் அளவுக்கு தெருவில் விடுவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் செல்லப் பிராணி வளர்ப்பு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தனது குழந்தையை நாய் கடித்துவிட்டதாகவும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டு ஜி.பி. முத்து விடியோ வெளியிட்டிருந்தார்.

இதில், நாய்க்கு ஆதரவாகப் பேசுபவர்களைப் பார்த்து கொந்தளித்த அவர், நாய்களை காப்பகத்தில் அடைக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது எனக் குறிப்பிட்டு, தனது கருத்தை ஆதங்கமாக பதிவு செய்து விடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நாய்களுக்கு ஆதரவாக நடிகை ஸ்வேதா விடியோ வெளியிட்டு, ஜி.பி. முத்துவை விமர்சித்துப் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது,

''சிலருக்கு பதில் கொடுக்க வேண்டாம் என நினைத்தாலும் மனம் கேட்கவில்லை. மனிதனா? நாயா? எனக் கேட்டால், மனிதர்கள்தான் முக்கியம். முதலில் மனிதர்களைப் பாருங்கள், பிறகுதான் நாய் போன்றவை எல்லாம் எனக் கூறும் நீங்கள், குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே? நாய் கடிக்கும் அளவுக்கு ஏன் விட்டீர்கள்?

நாய் கடித்தது மிகவும் மோசமான சூழல்தான். அந்த சூழல் யாருக்கும் வரக்கூடாது. ஆனால், பொதுநலனில் அக்கறை கொண்ட நீங்கள், உங்கள் பகுதியில் இருக்கும் 10 நாய்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தடுப்பூசி போட வேண்டியதுதானே? உங்கள் குழந்தைக்கு ஊசி போட்டதைப்போன்று செய்திருக்கலாமே?

நீங்கள், உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். உங்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டால், அங்கு சந்தோஷமாக இருப்பீர்களா? அதுபோன்றுதானே நாய்களுக்கும்.

யாரிடமோ காசு வாங்கிக்கொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசுவதாக கூறுகிறீர்களே? நீங்கள் விடியோ வெளியிடுவதும் காசு வாங்கிக்கொண்டுதானா?

நாயை என்ன பன்னாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? பார்வையாளர்களை கவர்வதற்காக பூனையை வைத்து விடியோ வெளியிடுகிறீர்களே? பூனையை வைத்து விடியோ வெளியிடுவது ஏன்?

இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமில்லை, எல்லா மிருகங்களுக்குமானது என்றால், அப்படியானால் புலி, சிங்கத்தையும் அழைத்துவந்து சாப்பாடு போடுவதுதானே எனக் கேட்பது நியாயமா?

நாய்கள் குறித்து பேசுபவர்கள் எல்லாம் செல்வந்தர்களே எனக் கூறுகிறீர்கள். இதனைப் பேசுவதற்கு பணக்காரராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நல்ல மனிதாமிமானம் இருந்தால் போதும். நாய் கடித்தால் என்ன ஆபத்து வரும் என்பதை அறியாத நீங்கள்? வளர்ப்பு பிராணிகள் பற்றியோ காட்டு விலங்குகள் பற்றியோ பேச என்ன தகுதி உள்ளது.

ஊரில் யார்யாரோ என்னென்னவோ செய்கிறார்கள். அதனால், பல பிரச்னைகள் உருவாகின்றன. நாயை கொண்டு சென்று பூட்டிவிட்டால் நாட்டில் எல்லாம் சரியாகிவிடுமா?'' எனப் பேசியுள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு பலரும் எதிராகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | 20 வது பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் ஜோவிகா!

Summary

actress suveta reply to GP muthu over Pet dog issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com