அக்‌ஷய் குமார் - பிரியதர்ஷன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

பிரியதர்ஷனின் பாலிவுட் திரைப்படம் குறித்து...
அக்‌ஷய் குமார் - பிரியதர்ஷன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!
Published on
Updated on
1 min read

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர்கள் அக்‌ஷய் குமார், சயிஃப் அலிகான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்தியளவில் பிரபலமான இயக்குநரான பிரியதர்ஷன் 96 திரைப்படங்களை இயக்கிவிட்டார். இதில், பல வெற்றிப் படங்களும் தேசிய விருது படங்களும் அடக்கம்.

இறுதியாக, நடிகர் மோகன்லாலை வைத்து மரக்காயர் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், பிரியதர்ஷன் அவர் இயக்கிய ஒப்பம் என்கிற மலையாளத் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்.

ஹய்வான் எனப் பெயரிட்ட இப்படத்தில் முன்னணி நடிகர்களாக அக்‌ஷய் குமார் மற்றும் சயிஃப் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்கியுள்ளது.

மோகன்லால் நடித்த ஒப்பம் திரைப்படம் 2016-ல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

director priyadharshan's oppam movie remake into hindi, starring akshay kumar and saif ali khan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com