நடிகை சிம்ரன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். ஜெயிலர் திரைப்படத்திற்கு இணையான வசூலை அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த வாரம் வரை கூலியின் ஆதிக்கம் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்ட சிம்ரன், “சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை. நமது சூப்பர் ஸ்டாருடனான அழகான தருணத்தை கூலி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படங்களின் வெற்றி மேலும் அழகாக்கியிருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்குப் பின் சிம்ரன் நல்ல காத்திரமானக் கதைகளைக் கேட்டு வருகிறாராம்!
இதையும் படிக்க: ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.