பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ”டூட்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், டூட் திரைப்படத்தின் “ஊறும் பிளட்” எனும் முதல் பாடலை படக்குழு இன்று (ஆக.28) வெளியிட்டுள்ளது. பால் டப்பா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை, சாய் அபயங்கர் பாடியுள்ளார்.
சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா சாலையில் (மௌண்ட் ரோடு), இப்பாடலின் நடன காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், யூடியூபில் வெளியான சில மணிநேரங்களில் 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஏற்கெனவே, டூட் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் “லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி” ஆகிய இரு படங்களும் தீபாவளி நாளன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.