
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் பாம் எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாத்மிகா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.
டி. இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ’இன்னும் எத்தனை காலம்’ எனும் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப் படம் செப்.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
The release date of the film 'bomb' starring actor Arjun Das has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.