இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

சாய் அபயங்கரின் புதிய பாடல் குறித்து...

Published On :

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய பாடல் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதுவே, சாய் அபயங்கரின் முதல் தமிழ் சினிமா பாடலாகும். இதற்கு முன் வெளியான மலையாளப் படமான பல்டியில் இடம்பெற்ற ஜாலக்காரி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், சாய் அபயங்கரின் முதல் தமிழ்ப் பாடலான ஊறும் பிளட் ஒன்றுமே புரியாத வகையில் இருப்பதாகவும் இசையை ரசிக்கவும் முடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர், நன்றாகத்தானே இருக்கிறது என்றாலும் பெரும்பான்மை ரசிகர்களுக்கு இப்பாடல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதால், சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் மற்ற திரைப்படங்கள் குறித்து கேலியான பதிவுகளையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.