இயக்குநர் ராஜ் நிதிமோரை மணந்தார் சமந்தா!

நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிதிமோர் திருமணம் பற்றி...
இயக்குநர் ராஜ் நிதிமோரை மணந்தார் சமந்தா
இயக்குநர் ராஜ் நிதிமோரை மணந்தார் சமந்தாPhoto: Instagram / Samantha
Updated on
1 min read

கோவையில் நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிதிமோருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரும் காதலித்து வருவதாக கடந்த சில நாள்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இதற்கு சமந்தா தரப்பில் எந்த மறுப்பும் தெரிவிக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று(டிச. 1) காலை நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார்.

தற்போது சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

யார் இந்த ராஜ் நிதிமோர்?

இயக்குநர் ராஜ் நிதிமோர் மற்றும் கிருஷ்ணா தசரகோதபள்ளி இருவரும் இணைந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளனர்.

தி பேமலி மேன், ஃபார்ஸி, கன்ஸ் அண்ட் குலாப்ஸ் உள்ளிட்ட பிரபல இணையத் தொடர்களையும் தயாரித்து இயக்கியுள்ளனர். சமீபத்தில் தி பேமலி மேன் 3-வது பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ராஜ் நிதிமோர் இயக்கிய தி பேமலி மேன் 2-ஆம் பாகத்தில் சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Actress Samantha married director Raj Nidimoru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com