பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்ற சமந்தா திருமணம்!

கோவையில் பூதசுத்தி விவாஹா முறையில் நடிகை சமந்தா திருமணம் நடைபெற்றுள்ளது.
நடிகை சமந்தா திருமணம்
நடிகை சமந்தா திருமணம்
Updated on
1 min read

கோவை: ஈஷா லிங்க பைரவியில் ‘பூதசுத்தி விவாஹா’ முறையில் நடிகை சமந்தா பிரபு, ராஜ் நிதிமோர் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நடிகை சமந்தா ருத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிதிமோர் ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது.

இந்தத் தனிப்பட்ட திருமண வைபவத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

திருமணம்
திருமணம்

லிங்க பைரவி சன்னதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.

இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும்,பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.

Summary

Actress Samantha's wedding took place in Coimbatore in a traditional wedding ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com