வேள்பாரி படப்பிடிப்பு எப்போது?

ஷங்கரின் வேள்பாரி படப்பிடிப்பு குறித்து...
இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர்
Updated on
1 min read

இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.

அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது.

இதனால், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மீதான வணிக பார்வைகளும் மாறத்துடங்கின.

தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 2026, ஜூன் மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

reports suggests director shankar's velpari movie shoot will begin 2026, june.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com