நடிகர் துல்கர் சல்மான் பாலிவுட் படப்பிடிப்பு தளம் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காந்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றதாகத் தெரிகிறது.
தற்போது, ஐயம் கேம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுபோக, இரண்டு தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பங்குபெற்ற துல்கர், “நான் ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டத்தில் பாலிவுட் படப்பிடிப்பு தளத்திற்கு இருவரை மட்டுமே அழைத்துச் செல்வேன். ஆனால், உட்கார நாற்காலியைத் தேட வேண்டும். அதனால், படப்பிடிப்பு தளத்திற்குள்ளேயே நடந்துகொண்டிருப்போம். மேலும், மானிட்டரின் அருகே எனக்கு இருக்கை கிடைப்பதிலும் சிக்கல் இருந்தது.
சொகுசு கார்களில் தன்னுடன் படையையே அழைத்து வருபவர்களைத்தான் ஸ்டார் என ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்ததால் நானும் பெரிய நட்சத்திரம் என்கிற மாயையை உருவாக்க இதையெல்லாம் செய்தால்தான் நாற்காலி கிடைக்குமா எனத் தோன்றியது” என்றார்.
தென்னிந்திய சினிமாவில் நல்ல வணிகத்தை வைத்திருக்கும் துல்கர் சல்மானுக்கே பாலிவுட்டில் இதுதான் நிலைமையா? என ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 திரைப்படத்தில் விநாயகன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.