

நடிகர் ரன்வீர் சிங் கன்னட ரசிகர்களிட்ம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவான காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ரூ. 850 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றிப்படமானது.
மேலும், இதில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி குறித்து பேசும்போது, காந்தாராவில் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு மிகச்சிறப்பாக நடித்ததாகத் தெரிவித்ததுடன் காட்சியை ரன்வீரும் கேலியாக நடித்துக்காட்டினார்.
இதனால், ஆத்திரமான கன்னட ரசிகர்கள் தெய்வீகமான காட்சியைக் கிண்டலடிப்பதா? என ரன்வீர் சிங்கை விமர்சித்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரிஷப்பின் அபாரமான நடிப்பைக் குறிப்பிடுவதே என் நோக்கமாக இருந்தது. அக்காட்சியில் அவர் எப்படி நடித்திருப்பார் என்பதை சக நடிகராகத் தெரிகிறது. இதனால், அவர் மீது நல்ல மரியாதையும் உள்ளது. நான் எப்போதும் நம் நாட்டின் கலாசார மற்றும் நம்பிக்கைகளை மதிப்பவன். ஒருவேளை நான் யாருடைய நம்பிக்கைகளையாவது காயப்படுத்தியிருந்தால் நான் மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வா வாத்தியார் புதிய வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.