நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

வா வாத்தியார் புதிய வெளியீட்டுத் தேதி!

வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி...
Published on

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தியின் வா வாத்தியாரின் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகிவந்த இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

அண்மையில், இதன் இரண்டாம் பாடலான ஆலப்பிக்கே உம்மாக் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இப்படம் வருகிற டிச. 12 ஆம் தேதி திரைக்கு வருமென புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Summary

karthi's vaa vaathiyar movie new release date announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com