

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பாலய்யா மற்றும் இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான “அகண்டா 2: தாண்டவம்” திரைப்படம் நாளை (டிச.5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது. இப்படத்துக்கு, இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் புதிய படம், 3-டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று (டிச. 4) திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறினால் இந்தியாவில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இருப்பினும், வெளிநாடுகளில் அகண்டா 2: தாண்டவம் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டபடி திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வித்தியாசமான படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.