மலேசியாவில் 24எச் சீரிஸில் பங்கேற்கும் நடிகரும் கார் ரேஸருமான அஜித் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி தனக்குப் பிடித்த கார் ரேஸிங்கிலும் பயணித்து வருகிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்துக்குப் பிறகு அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் இடைவெளியில் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார்.
அஜித்தின் அணி மலேசியாவில் நடைபெறும் 24எச் சீரிஸில் மூன்றாம் இடம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் போட்டிக்கு முன்பாக அஜித் பேசியதாவது:
எனது ஒப்பந்ததாரர்களுக்கு நன்றி. எனது ரசிகர்களுக்கும் நன்றி. இவ்வளவு தூரம் வந்து கார் பந்தயத்தை ஊக்குவிப்பது இந்திய ரேஸிங் வீரர்களுக்கு மிகவும் நல்ல விஷயம்.
கடைசியாக இங்கு நான் 2003-இல் ஃபார்முலா பிஎம்டபிள்யூ கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தேன். மீண்டும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி.
சினிமா, கார் பந்தயத்தில் பங்கேற்க இரண்டையும் பிரித்து பார்க்க தெரிந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக எனக்கு நல்ல பயிற்சியாளர்கள் அமைந்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி எனப் பேசினார்.
8 மணிநேர ரேஸிங்கிற்குப் பிறகு, அஜித் அணியினர் இரண்டாம் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
கார் பந்தயதுக்குப் பிறகான அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் கொண்ட புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.