அர்ஜுன் தாஸ், அன்னா பென் கூட்டணியில் புதிய படம்!

அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் புதிய திரைப்படம்....
அர்ஜுன் தாஸ், அன்னா பென் கூட்டணியில் புதிய படம்!
Updated on
1 min read

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

தமிழில் வளர்ந்துவரும் நாயகனாக அர்ஜுன் தாஸுக்கு இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றுக் கொடுத்தது.

தெலுங்கிலும் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து ஓஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, இவர் கதாநாயகனாக நடித்து முடித்த ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

இந்த நிலையில், பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

இதனை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, சான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கின்றனர்.

Summary

actors arjun das and anna ben new movie pooja happened

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com