

நடிகர் ரஜினிகாந்தின் “படையப்பா” திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவான “படையப்பா” திரைப்படம், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தில், நடிகர்கள் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், லட்சுமி, ரமேஷ் கண்ணா, அப்பாஸ், ராதா ரவி, ப்ரீத்தா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்துடன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தன.
இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிச.12 ஆம் தேதி “படையப்பா” திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, படையப்பா திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை படக்குழுவினர் இன்று (டிச. 10) வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சூர்யா - 47 உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.