நடிகர் சூர்யாவின் 47-வது படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.
இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
தற்போது, இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சூர்யா நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதையும் படிக்க: வா வாத்தியார் வெளியீட்டில் மீண்டும் சிக்கல்!
Summary
actor suriya's 47th movie ott rights hold by netflix
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








