நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்து சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
பின், டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இப்படத்தை வெளியிடுவதற்கான தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காரணம், தொழில் நஷ்டத்திலிருக்கும் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடனாக பெற்ற ரூ.21.78 கோடியை செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, நிதிச் சிக்கலால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் படத்திற்கு பிரச்னை எழுந்துள்ளது கார்த்தி ரசிகர்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையும் படிக்க: ரத்னகுமாரின் புதிய பட பெயர் டீசர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.