விடுமுறையை கொண்டாட சென்ற அய்யனார் துணை தொடர் நடிகர்கள்!

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்ற அய்யனார் துணை தொடர் நடிகர்கள்.
விடுமுறையை கொண்டாட சென்ற அய்யனார் துணை தொடர் நடிகர்கள்!
Updated on
2 min read

அய்யனார் துணை தொடர் நடிகர்கள் விடுமுறையை கொண்டாட அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் மதுமிதா, அரவிந்த் சேஜு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 3 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நடிப்பவர்கள் இளம் வயது நடிகர்களாக இருப்பதால், படப்பிடிப்பு இல்லாத நாள்களில் விடுமுறையை கொண்டாட வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில், அய்யனார் துணை தொடரில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று இவர்கள் நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று, விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் மதுமிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள், விடியோக்களை ரசிகர்கள் பார்த்து, தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

Summary

Ayyanar thunai serial holiday Andaman & Nicobar Islands

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com