

நடிகர் சசிகுமாரின் “மை லார்ட்” திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சசிகுமார் - இயக்குநர் ராஜு முருகன் கூட்டணியில், ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “மை லார்ட்”.
இந்தப் படத்தில், நடிகர்கள் சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தின் “எச காத்தா” எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், மை லார்ட் படத்தின் “ராசாதி ராசா” எனும் இரண்டாவது பாடலை, படக்குழு இன்று (டிச. 12) வெளியிட்டுள்ளது.
பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை, பாடகர்கள் வி.எம். மகாலிங்கம் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் பாடியுள்ளனர்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சுவாரசியமான படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.