/

வரலாறு எப்போது திறக்கிறது தெரியுமா? இயக்குநர் பிறந்த நாளில் நானி வெளியிட்ட விடியோ!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பிறந்த நாளுக்கு நானி வெளியிட்ட விடியோ குறித்து...

News image

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. - படம்: எக்ஸ் / நானி

Updated On :14 டிசம்பர் 2025, 12:01 pm IST

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பிறந்த நாளுக்கு நடிகர் நானி விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார்.

நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் - 3 ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன.

தற்போது இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் 8 மொழிகளில் வரும் 2026இல் மார்ச் மாதம் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இயக்குநர் பிறந்த நாளில் படப்பிடிப்பு தளத்தில் அவரது ஈடுபாடு குறித்த காட்சிகளுடன் விடியோ வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Summary

Actor Nani has released a video and extended his birthday wishes to director Srikanth Odela.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.